Saturday, December 17, 2005

* தட்டான் *



இறக்கைகளின் இயக்கத்தைப்
பார்க்க முடியாத வேகம்
ஊகிக்க முடியாமல்
சட்டென திரும்பி
மாறும் வழித்தடம்
ரகசியமாய்ப் பின்தொடர்ந்து
கரும்பச்சையில் நீண்டிருக்கும்
வால்பிடித்துத் தூக்குகையில்
விரலை வளைந்து
கவ்வும் சினம்
நூல்கட்டி காற்றில்லாமலும்
பறக்கும் தட்டான் பட்டம்

சிறகுகள் போல்
மென்மையான இவள்
ஊகிக்கமுடியாத தருணங்களில்
சட்டெனக் கண்சிமிட்டிப்
போகிறாள் நூல்போன்ற
என் காதலில் கட்டுண்டு
இச்சிறிய தட்டான் போல்

***

நன்றி. மரத்தடி.காம்

3 comments:

ENNAR said...

தட்டான் பறந்தால் மழைபெய்யுமாமே
தற்போது மழைபொழிகிறது அத்தட்டானை பிடித்து அடைத்து வையங்கள்

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

//தட்டான் பறந்தால் மழைபெய்யுமாமே//

ஆமாங்க. என்னவோ இந்த வருஷம் அளவுக்கதிகமாகவே பேஞ்சிருக்கு. புடிச்சு வைக்க்த்தான் ஆளில்லை! :((

அடுத்த வருடம் வெயில் அடிச்சுப் பிய்க்கும்போது அந்தத் தட்டானைக் கூப்பிடாமயா போயிடப்போறோம்? :)

நன்றி.

howardmarks1980 said...

I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. My blog is just about my day to day life, as a park ranger. So please Click Here To Read My Blog

http://www.juicyfruiter.blogspot.com