காணி நிலம்

ஒசந்து கெடந்த தென்னை, பனையைக் காங்கலை
மாமர, வாழைத் தோப்புகளையும் காங்கலை
கரும்பு, கம்பங் காடுகளையும் காங்கலை
ரெண்டு பக்கமும் பச்சைக்கம்பளமா விரிஞ்ச
நஞ்சை, புஞ்சைகளையும் காங்கலை
வரப்புகளைக் காங்கலை ஓடின
வாய்க்காலுங்களையும் காங்கலை
எல்லாமே 60 x 40 துண்டுகளா மாறிப் போச்சுது
நாலு மூலைல வெள்ளைக் கல்லுங்க - பூமித்
தாயோட கல்லறை மாதிரி தோணுதுங்க
மயானமாச்சுது பூமி
மாறிப் போச்சுது மண்ணு
அவ கண்ணீர் விட்டு அழுது அழுது
வத்திப் போச்சுது தண்ணியும்
பூமித் தாயைச் செரச்சுப் போட்டு
மூதியாக்குற மேதாவி ஜனங்க
நெல்லு வெளைஞ்ச பூமில
வீடுங்க வெளையுது இன்னிக்கு
இப்படியே போனா நாளை பசிக்குச்
செங்கலைத்தான் திங்கணும் போல
'காணி நிலம் வேண்டும்'னத ஒருவேளை
தப்பாப் புரிஞ்சிக்கிட்டோமோ?
***


0 comments:
Post a Comment