Friday, November 14, 2008

மனம் மொழி தூரம்



தொலைதூரத்தில் தனித்திருக்கிறது அவள் மனம்
துன்பங்களில் உழன்றிட ஆதரவு தேடுகிறது
தொலைந்திட்ட என் இதயத்தைத் தேடியலைகையில்
தென்பட்டது அவள் முகம் - அது
நிரந்தரமாயிற்று என் சிந்தையில்

தூரம் தள்ளி வைத்திருந்தாலும் - அவள்
துடித்திடும் இதயத்தைக் கேட்க முடிகிறது - ஆனாலும்
அவளின் துன்பமென்னவென்றறியாது தவிக்கிறேன்
நான் நட்பா, எதிரியா - அவளின் துன்பங்களில் ஒன்றா
எனக்கூட அறிய வகையில்லாது துடிக்கிறேன்

உணர்வுகள் புரிபடாத வார்த்தைப் பரிமாற்றங்கள்
ஆயாசத்தைத் தருகின்றன - அவளிடம்
பட்டெனச் சொல்லிவிட உதடுகள் துடித்தாலும்
வெடித்துச் சிதறும் என் வார்த்தைகளின் சுயநலத்தில்
அவளை இழந்துவிடக்கூடிய அச்சம் என்னை வாட்டுகிறது

எதுவுமில்லாவிட்டாலும் இப்போதைய எங்களின்
சம்பிரதாய வார்த்தைகளும் உரையாடல்களும்
அவை வெற்றாகவே இருந்தாலும்கூட - அவை
நட்புச் சங்கிலியாக எம்மைப் பிணைப்பது போதும்
மனங்கள் தொடர்ந்து துடிக்கட்டும்

என்றாவதொரு நாள் உணர்வு மொழிகளின் விளிம்பில்
அர்த்தமற்ற வார்த்தைகள் உடைந்து போக
மடைதிறந்து சங்கமிக்கும் மனங்களின் நேசத்தில்
இன்றைய தற்காலிக துடிப்புகள் கரைந்து போகும்

நம்பிக்கைதானே வாழ்க்கை?

***

0 comments: