மனம் விட்டு, வாய்விட்டு

முதற் கைக்கடிகாரம், முதல் ஜோடிக் காலணிகள், முதல் திரைப்படம்,
முதல் புகைப்படம், முதல் மழை நனைதல், முதல் நீச்சல்,
முதல் சைக்கிள், முதல் வீடு, முதல் திருட்டு,
முதல் வெற்றி, முதல் வேலை, முதல் சம்பளம்
முதல் நண்பன், முதற் கடிதம், முதற் பாராட்டு,
முதல் ரயில், முதல் வான் பயணம், முதல் வாகனம்,
முதற் காதலி முதல் தொடுகை, முதல் முத்தம்
முதலிரவு, முதலுறவு, முதற் குழந்தை
முதல் வீடு, முதன்முறையாய் முதலாளியாய் - என
முப்பது வயதுகளில் முப்பது தருணங்களைப்
புன்னகைக்க வைத்தக் காரணங்களாய்
சுலபமாகச் சொல்ல முடிகிறது - ஆனாலும்
மனம்விட்டு, வாய்விட்டுச் சிரித்த தருணங்கள்
எவையென்று யோசித்தால் ஓரிரண்டைத் தவிர
வேறெதுவும் குறிப்பிட முடியாதிருக்கிறது
காரணங்கள் அருகிய கடந்த காலத்தைத்
திரும்பிப் பார்க்கையில் சில நேரம்
புன்னகைக்கக்கூட முடிவதில்லை
****


0 comments:
Post a Comment