Friday, January 02, 2009

ஹேப்பி நியூ இயர்



ஜனவரி ஃபர்ஸ்ட் அன்னிக்கும்
ஏப்ரல் ஃபோர்ட்டீன்த்தன்னிக்கும்
”ஹேப்பி நியூஇயர்” என்று
உற்சாக பானத்தை உள்ளே செலுத்தி
ஊர் முழுதும் ஓடியாடி
அலறிக் கொண்டாடுகிறான்
தமிழன்

புத்தாடை வாங்கியணிகிறான்
பெண்கள் பட்டுப்புடவையும்
நகைகளும் கடனும் வாங்கி
பீரோவில் பூட்டிக்கொள்கிறார்கள்

ஆங்கிலப் புத்தாண்டு
தமிழ்ப் புத்தாண்டு
கன்னட, தெலுங்குவருடப்
பிறப்போடு சேர்த்து
இப்போதெல்லாம்
சீனப் புத்தாண்டுக்கும்கூட
கோவிலுக்குப் போகிறான்
பிள்ளையாரைக் கும்பிட்டு
உக்கி போடுகிறான்
எல்லாருக்கும் மின்னஞ்சல்
வாழ்த்து அனுப்புகிறான்

நாள்பூரா தொலைக்காட்சியில்
நடிகர் நடிகைகளைப் பார்த்துவிட்டு
நன்றாக உண்டு உறங்குகிறான்
புத்தம் புதிய படங்களுக்கு
இரண்டாமாட்டம் நண்பர்களுடன்
போகிறான்
சிவந்த கண்களுடன் எழுந்து
மறுநாள் அலுவலகத்தில் சந்திப்பவர்களிடம்
”ஹவ்வாஸ் த பார்ட்டி?” என்று
குசலம் விசாரிக்கிறான்

இப்படித் தமிழரெல்லாரும் இன்புற்றிருக்க
மூலையில் கேட்பாரின்றிக் கிடக்கிறது
தமிழ் மட்டும்.

***

2 comments:

wholesale jewelry said...

Very good!

கானகம் said...

//இப்படித் தமிழரெல்லாரும் இன்புற்றிருக்க
மூலையில் கேட்பாரின்றிக் கிடக்கிறது
தமிழ் மட்டும். //

அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி.. தமிழ் பேரைச்சொல்லி அரசாங்கம் மக்களை ஏமாற்றும்போது தமிழனுக்கு தமிழ்ப் புத்தாண்டெல்லாம் தன்னியடிக்க கிடைத்த இன்னொரு வாய்ப்பே..