மீன்

கால் மூழ்க நிற்கையில்
பாதம் சூழ்ந்து முத்தமிடும் மீன்கள்
அழுக்கெடுக்கின்றனவாம்
கண்ணாடித் தொட்டிக்குள்
தங்க மீன்களும் வெள்ளி மீன்களும்
வாய்திறந்து நீரைச் சுவாசித்தபடி
வளைய வருகின்றன
தொட்டி பளிச்சென இருக்கிறது
ஓய்வின்றி நீந்தி வரும் மீன்கள்
அழுக்கெடுக்கின்றனவாம்
குதூகலமாய்ச் சுற்றிவரும்
மீன்களிலொன்றை எடுத்து
மனதுக்குள் விட்டாலென்ன!
***


4 comments:
"குதூகலமாய்ச் சுற்றிவரும் மீன்களிலொன்றை எடுத்துமனதுக்குள் விட ..." வேண்டிய மனதர்கள்தான் எங்குமே நிறைந்திருக்கிறார்கள்.
கருத்துள்ள நல்ல கவிதை.
அன்பின் மருத்துவர் ஐயா
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
அன்புடன்
சுந்தர்
குதூகலமாய்ச் சுற்றிவரும் மீன்களிலொன்றை எடுத்து
மனதுக்குள் விட்டாலென்ன//
அங்கயே கவிதை முடிஞ்சிடுச்சே சுந்தர்; மீதி ரெண்டு வார்த்தை விரயம்.
(இப்படி எல்லாம் விமர்சனம்-கற பேர்ல எதையாவது எழுதி எவ்ளோ வருஷமாச்சு!)
கருத்துக்கு நன்றின்னு மறுமொழி வந்ததோ தொலைச்சுடுவேன்! :)
ஹல்லோஓஓஓ ஜெஸ்ரீ!
நீங்க விமர்சனம் பண்ணி ரொம்ப நாளானது இருக்கட்டும். உங்களை இந்தப் பக்கம் பாத்தே ரொம்ப நாளாச்சு!!!!
//அங்கயே கவிதை முடிஞ்சிடுச்சே சுந்தர்//
“எனத் தோன்றிற்று” எழுதும்போதே! :-)புத்தி சும்மா இருக்குதா? குறுக்கக் கோடு போட்டு அழிச்சுட்டேன்!
அன்புடன்
Post a Comment