உலகத்தினுச்சியில் நிற்பதைப் போல்
மேகங்களின் மீது பறப்பதைப் போல்
முடிவிலாது விழுவதைப் போல்
முடிவே இதுதான் என்பதைப் போல்
புதுவாழ்வு துவங்குவதுபோல்
வாழ்வின் அர்த்தம் இதுவென்பதைப் போல்
எல்லாமும் பெற்றதைப்போல்
எல்லாவற்றையும் ஒருசேர
ஒரே முத்தத்தில் உணரவைத்தாயே
கண்ணம்மா!
0 comments:
Post a Comment