இன்று மற்றுமொரு நாளே
சீறிப்பாயும் ராக்கெட்டுகள்
சரவெடிகள் அணுகுண்டு
லஷ்மி வெடி பூச்சட்டி
தரைச்சக்கரம் கம்பிமத்தாப்பு
எண்ணைக் குளியல்கள்
புத்துடைகள் இனிப்புகள் காரங்கள்
வாழையிலை நிரம்பிய விருந்து
தலைதீபாவளி கால்தீபாவளி
நகை நட்டு பட்டுச்சேலை
நாள்முழுவதும் ஊடகங்களில்
நாடாள்வோர் தலைமையில்
நடிக நடிகையர்களின்
களிப்பாட்டங்கள்
இவை எதுவமற்று
இன்று மற்றுமொரு நாளே
என இன்றைய கஞ்சிக்கும்
என்று போல் அல்லாடும்
எளிய மக்களுக்கு
ஒலியற்ற புகையற்ற
உள்ளத்தில் புகைச்சலற்ற
இனிய தீபாவளி வாழ்த்துகள்!



1 comments:
கவிதை நன்று
வாழ்த்துக்கள்
விஜய்
Post a Comment