Thursday, July 07, 2011

மனத் தனியன்


இடப்புறம் ஒருக்களித்து இரவோடு 
படுத்திருக்கிறேன் தனிமையில் 
வலது விழியோரம் நீர் கசிந்து 
இடவிழி சேர்ந்து கனக்க 
இமை மீறிக் கண்ணீர் 
காதை நனைத்துக் கரைய 
மனதும் கரைந்தது - ஆனாலும் 
கரையாது கல்லாய்ச் சமைந்திருக்கின்றன
சில நினைவுகள் மட்டும் 
கண்களைக் கசித்துக்கொண்டு 
பிரிவென்னும் நரகத்திலுழல்வது 
மகாகவிக்கு மட்டும் நிகழ்வதில்லை 
எனக்கும் என் போன்ற சாமான்ய 
மனத் தனியர்களெல்லாருக்கும்

***

0 comments: