அலகிலாக் காதல்
உன் என நினைக்குமுன்னே
உள்ளில் நிகழும் நெகிழ்வையும்
என் எனச் சொல்லுமுன்னே
என்னில் நீ நிறைவதையும்
எனக்கெல்லாம் நீயே என்பதை
எவ்வார்த்தையும் சிக்காதிருந்தும்
யாருஞ் சொல்லாச் சிற்பமாய்
வடித்திடத் துடிக்கிறதென் நெஞ்சு
வயிற்றிலெப்போதும் பறக்கும்
பேசாப் பட்டாம் பூச்சிகளின்
தவிப்பினைத் தூவும் இச்சிறு
வரிகளின் நிழலில் ஆவேசமாயுன்
வருகைக்காகக் காத்திருக்கிறதென்
அலகிலாக் காதல்



