Wednesday, November 21, 2012

அம்புகள்



அம்புகளை ஒடித்துவிட்டுக்
கோழைகள் குதூகலிக்கிறார்கள்
அம்பறாத்தூணியை நிரப்பியபடி
வில்லாளி ஏளனிக்கிறான்
காயங்களின் குருதிப்புனல்
தொடர்ந்தோடுகிறது

***

Saturday, June 23, 2012

பின்னிரவுகள்



பகல்களும் இரவுகளும் இடையறாது
நகர்ந்துகொண்டேயிருக்கின்றன
இரவுகளில் தழுவும் உறக்கத்தைப்
பகல் தட்டியெழுப்பிக்கொண்டேயிருக்கிறது

வழக்கமாக உற்சாகத்தை எழுப்பும் உதயம்
விழித்திருந்த பின்னிரவுகளில்
தாங்கவொண்ணாத் துயரமெழுப்புகிறது

இரவு எப்போது முடியுமெனச்
சில இரவுகள்
முடிவற்று நீளாதாவெனத்  தோன்றும்
சில இரவுகள்

உறக்கமற்றிருக்கும் பின்னிரவுகளில்
மூடிய கண்களுக்குள்
பழங்காட்சிகள் விரிய
கரையாத நினைவுகளுடனான
மனதின் இவ்வுரையாடலை
நானும் இரவும் மட்டும்
அவதானித்துக்கொண்டிருப்பது
விநோதமாகத் தோன்றுகிறது

இறுதியில் களைத்துப் போய்
உடலை எழுப்பிவிட்டு பகலில்
உறங்கிவிடுகிறது மனம்

ஒரு முடிவுறாச் சுழற்சியாகத்
தொடர்கிறது இவ்வியக்கம்!

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...