அடுக்கடுக்காய் மலைத்தொடர்
அலைபோல் முகடுகளில்
வழிந்து தவழும் மேகங்கள்
மஞ்சள் புல்வெளிகளுக்கிடையே
கரும்பச்சை மரக் கொத்துகள்
பரமபதப் பாம்பு போல்
நெளிந்து ஊடுருவும் சாலைகள்
அதிவெட்பம் கடுங்குளிர் ஏதுமின்றி
சுகமான தட்பவெப்பம்
எப்போதும் மின்னும் சூரியனின்
உதய அஸ்தமன மாயாஜாலங்கள்
பரந்திருக்கும் திராட்சைத் தோட்டங்கள்
எந்திரங்களின் விவசாய தந்திரங்கள்
உலகிற்குப் புதுநுட்பம் தரும்
ஊற்றுக்கண் நகரங்கள்
கடவுளின் ஓரவஞ்சனை
கலிஃபோர்னியா!

No comments:
Post a Comment