Friday, September 12, 2008

என் காதலும் அதற்கான கவிதையும்



ஏய்! என்னது காதல் கவிதை எழுதணுமா?

எனக்குக் காதல் கவிதைன்னாலே புடிக்காது
ஒருவேளை எழுத வராதுங்கறதால
ச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு
அப்படிச் சொல்றேனோ??

Well, உனக்கு நினைவிருக்கா?
First Meet பண்ணப்போ ரெண்டே second-ல
I fell in love with you!
But I'm still wondering
why I took the 2nd second!

எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ உன்னிடம் இருக்கிறதுன்னு
பாலு பாட்டை எத்தனை தடவை
கேட்ருப்பேன்? பாடிருப்பேன்?

அது என்னன்னு இன்னிக்கு வரைக்கும் தெரிலைடி

என்னடீ மாயம் செஞ்சே!
அது உன்னோட smile-ஆ?
உன் husky voice-ஆ?
நவாப்பழக் கண்களா? இல்லே
கடிச்சிடலாம்னு தோண்ற உதடுகளா?
இல்ல கழுத்... ஏய்.. அடிக்காதே

Let me try this!

----

மழை பெய்த நாட்களில்
அரவமற்ற தெருக்களில்
விரைந்திட்ட வாகனத்தில்
செல்கையில் நீயென் கழுத்தில்
முத்தமிட்டென்னை மயிர்
கூச்செறியச் செய்த கணங்கள்
மனக் கோவிலின் கல்வெட்டுகளாய்
நிற்கின்றன இன்றும்

இடையணைத்த பயணத்தில் உயிரைக்
கதகதப்பாக்கினாய்
ஆடைமாற்றிடப் பொறுமை காத்துப் பின்
அருகில் நெருங்கினாய்
உடன் துவங்கிய முடிவிலா
முத்தங்களில்
உயிர்த் தேடலைத் தொடர,
கதவு தட்டத் தயங்கி வெளியில்
காத்திருந்தது இரவு - இரவு முழுவதும்.

எத்தனை இரவுகளை
நாம் காக்கச் செய்தோம்!

நரை படர்ந்த பின்னும் இளமையாகத்
தொடருகிறது நம் காதல்
நாமிருக்கும்வரை மட்டுமல்ல
நமக்குப் பின்னும் அது தொடரட்டும்

----

ஆச்சா... இதுக்கு மேல முடியாதுப்பா
என்னோட காதல் பத்தி இனிமே
கவிதையா எழுதச் சொல்லாதே
எனக்குத் தலைவர் கமல் சொன்னதுதான்
ரொம்பப் பிடிக்கும் - என்னவா?
சாத்தியம் என்பது சொல் அல்ல செயல்!

செயல்லயே காட்டிடறேனே ப்ளீஸ்!
என் கிட்டக்க வாயேன்!

****

2 comments:

கானகம் said...

பெர்சனல் கடிதங்களையெல்லாம் கவிதை என்ற பெயரில் ப்ளாக்கேற்றுவதை வண்மையாக :-) கண்டிக்கிறேன்.

//கதவு தட்டத் தயங்கி வெளியில்
காத்திருந்தது இரவு - இரவு முழுவதும்.//

அருமை...

ஜெயக்குமார்

Sundar Padmanaban said...

யோவ் கானகம்.

//பெர்சனல் கடிதங்களையெல்லாம் கவிதை என்ற பெயரில் //

'உலகோடு ஒத்து வாழ்' என்று பெரியவங்க சொன்னதைக் கடைப்பிடிக்கிறேன்யா? :-)

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...