Saturday, January 05, 2013

பதுமை



ஜன்னலில் நிற்கும் பதுமை
போலில்லாது
உணர்வும் உயிரும் நிறைந்த
தென்றலாய் இருக்கிறாய் நீ
உன் அருகாமை
எப்போதும் வேண்டி
மகிழும் மனதின் விம்மல்கள்
விழியோரங்களில் ஈரமாய்
மின்னுகி்ன்றன

சம்பிரதாய உரையாடல்களும்
வெற்று வார்த்தைகளும்
சலிப்பையேற்படுத்தும் தருணங்களில்
எண்ணப் பரிவர்த்தனைகளை
நம் மௌனங்கள் தொடர்கின்றன

என் ஏந்துதலில்
என்னையேந்திச் செல்லும்
எனக்கான என் தேவதை நீ

உன் சிறு தொடல்களும் புன்சிரிப்பும்
அணைப்புகளும் ரகசிய முத்தங்களும்
வெம்மையேற்றிப் படர்கின்றன
உடலிலும் மனதிலும்

இரவு நிரம்பிய அறையிலும்
விழிகளிலும் அதரங்களிலும்
ஒளிர்கிறதுன் புன்னகை
அதைக் கவ்விக் கண்மூடுகிறேன்

உன்னையும் என்னையும்
நம்மிடம் சரணடைந்திட
இரவையும் இப்பயணத்தையும்
முடிவற்றதாக்கும் முடிவுடன்
கண்கொட்டாது காத்திருக்கிறது
அப்பதுமை
***

No comments:

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...