Saturday, January 12, 2013

மழை



பின்கழுத்திலென் மூச்சுபட்டுப்
பூனைமயிர் சிலிர்க்கக்
காதுமடல்களை நாவால் நிரடிக்
கடித்துன்னையணைத்துக்
கண்மூடியுன் தோள்களில்
சத்தமில்லா முத்தமிட்ட
காலம் உறைந்த கணங்களை
இருள்போர்த்திய இவ்வறைக்கப்பால்
ஆவேசமாய்ப் பொழியும்
மழையோசை நினைவூட்டுகிறது!

No comments:

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...